
சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள ஜான்ஜ்கிரில் அங்கூர் என்ற 19 வயது இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவர் அவ்வப்போது instagram-ல் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். இவரை instagramயில் ஏராளமான ஒரு பின் தொடரும் நிலையில் கடந்த 29ஆம் தேதி இன்ஸ்டாகிராமில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்து கொண்டிருந்தார். இவருடைய லைவ் வீடியோவை 20 க்கும் அதிகமானோர் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அவர் லைவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதனை தடுக்க பலர் முயற்சி செய்த நிலையில் சிலர் அவருடைய வீட்டிற்கு நேரடியாக சென்றனர்.
ஆனால் அவர் அதற்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அவர் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் அவருடைய பெற்றோர் கூலி தொழிலாளிகளாக வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது. இவர் காதலில் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டதும் செல்போனில் அதிக நேரம் செலவிடுவதும் தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.