
ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பொறுப்பேற்று, பாஜக மாநில தலைவர் ரவீந்தர் ரெய்னா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 90 தொகுதிகள் கொண்ட தேர்தலில், காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி பெரும்பான்மையுடன் 49 இடங்களை வென்றுள்ளது.
இது பாஜகவிற்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. பாஜக 29 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது, PDP 3 இடங்கள், மற்ற கட்சிகள் 9 இடங்களைப் பெற்றுள்ளன. இந்தச் சூழ்நிலையில்தான் ரவீந்தர் ரெய்னா தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.