
பிரபல ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளரான ஹார்வி வெய்ன்ஸ்டீன் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு கொரோனா தொற்று உடன் இரு நுரையீரல்களிலும் நிமோனியா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை நியூயார்க் சிறையில் இருந்து இவர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
நடிகைகளை பலாத்காரம் செய்த வழக்கில் கடந்த 2020 ஆம் ஆண்டு இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஹாலிவுட்டில் மீ டூ இயக்கத்தைத் தொடங்க காரணமாக இருந்தார். பல நடிகைகள் அவர் மீது பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டினர்.