
திண்டிவனம் நகரில் தவெகவின் இளைஞரணி நகர தலைவர் ரியாஸ் தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா, கூல் லிப் போன்ற பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்ததற்காக காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இச்செய்தி நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டிவனம் பகுதியில் சட்ட விரோதாக உடலுக்கு தீங்கு விளைவிக்கும் தன்மை கொண்ட பான்பராக், குட்கா போன்றவை விற்பனை செய்யப்படுவதாக புகார் இருந்தது. இதை எடுத்து மேற்கொண்ட விசாரணையில் தமிழக வெற்றி கழகத்தின் நகர இளைஞரணி தலைவர் இந்த குற்ற செயலை செய்து வந்ததே தெரியவர
காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி, பின் ரியாஸ் விற்பனை செய்கின்ற இடத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அங்கு பெருமளவில் குட்கா, பான்பராக் மற்றும் கூல் லிப் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெற உள்ள நிலையில் அதன் நிர்வாகி கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.