நாடாளுமன்றத் தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கவுள்ளது. ரேபரேலி, அமேதி உள்ளிட்ட 49 தொகுதிகளில் நடைபெறும் வாக்குப்பதிவில் 695 பேர் போட்டியிடுகின்றனர். இதில், சுமார் 8.95 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். ஏற்கெனவே நடந்து முடிந்திருக்கும் 4 கட்ட வாக்குப்பதிவில் 66.95% வாக்குப்பதிவு மட்டுமே நடைபெற்றிருப்பதால் அதனை அதிகரிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கைகள் எடுத்துள்ளது.

இந்நிலையில் மேற்குவங்க பாஜக எம்.பி குனார் ஹெம்ப்ராம். மக்களவைத் தேர்தலில் தனக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார். இந்நிலையில், அந்த நம்பிக்கை பொய்த்து போனதை அடுத்து, கடந்த மார்ச் மாதம் கட்சியில் இருந்து விலகினார். இந்நிலையில், இன்று அவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார்.