
மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கையில் கோவை தொகுதியில் முதல் சுற்றின் முடிவில் திமுகவின் கணபதி ராஜ்குமார் முன்னிலை வகித்து வந்த நிலையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை பின் தங்கினார். இந்த நிலையில் இரண்டாம் சுற்று முடிவில் அண்ணாமலை முன்னிலை பெற்றுள்ளார். திமுகவின் கணபதி ராஜ்குமாரும், அதிமுகவின் சிங்கை ராமச்சந்திரனும் பின்னிலை வகிக்கின்றனர். அதிமுக கோவையில் மூன்றாம் இடத்தில் உள்ளது.