
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டுக்காக விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் புஸ்ஸி ஆனந்த் அனுமதி கேட்டிருந்த நிலையில் காவல்துறை தரப்பில் 21 கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில் அதனை கேள்விகளுக்கும் எழுத்துப்பூர்வமாக கட்சி நிர்வாகம் பதில் வழங்கியுள்ளது. இதன் காரணமாக காவல்துறையினர் முதல் மாநாட்டு அனுமதி வழங்கி விட்டதாக செய்திகள் வெளிவந்தது.
ஆனால் தற்போது அதில் உண்மை இல்லை என்பது தெரியவந்துள்ளது. அதாவது விஜயின் முதல் மாநாட்டுக்கு அனுமதி வழங்கவில்லை எனவும் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த புஸ்ஸி ஆனந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் விழுப்புரம் எஸ்பி கூறியுள்ளார். மேலும் பேச்சு வார்த்தை முடிந்த பிறகு அனுமதி கொடுப்பதா இல்லையா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இது தவெகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது