ஈரோடு மாவட்டம் வெள்ளிமலையில் வசிக்கும் சிவம்மா என்ற பெண், திடீரென ஏற்பட்ட பிரசவ வலியால் அவதிப்பட்டுள்ளார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால், ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருக்கும் வழியிலேயே பிரசவ வலி அதிகரித்துள்ளதால், வாகனத்தை நிறுத்தி அவசரமாக பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது.

இந்த கடினமான சூழலில், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ராஜா மிகுந்த சாமர்த்தியத்துடன் செயல்பட்டு, தாய்க்கும் குழந்தைக்கும் உரிய உதவிகளை செய்துள்ளார். அவரது துணிச்சலான செயல்பாட்டால், தாய் மற்றும் ஆண் குழந்தை இருவரும் தற்போது நலமுடன் உள்ளனர்.