
டெல்லியில் நிதி அயோக்கின் 9-வது நிர்வாக குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டம் வருகின்ற ஜூலை 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இது பிரதமர் மோடி 3-வது முறை பிரதமராக பதவியேற்ற பிறகு நடைபெறும் முதல் கூட்டம் ஆகும். அதன்பிறகு இந்த கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார்.
இந்நிலையில் இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்ள இருப்பதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது. இதற்காக அவர் வருகின்ற 27 ஆம் தேதி டெல்லிக்கு செல்கிறார். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசின் நிலுவைத் தொகை மற்றும் நிதி விவகாரம் தொடர்பாக பேச இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.