கர்நாடக மாநிலம் பெங்களூரு பாகலகுண்டே பகுதியில் ஒரு உடற்பயிற்சி கூடம் அமைந்துள்ளது. இங்கு சராவணி (22) என்ற இளம் பெண் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக தங்கி இருந்த நிலையில் பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். ஆனால் அதற்கு சராவணி மறுப்பு தெரிவித்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பாக சராவணியை சந்திப்பதற்காக அவருடைய தாய் வீட்டிற்கு வந்தார். அப்போது தன் மகளை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.

ஆனால் அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இவர் நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு சென்ற நிலையில் திடீரென வாந்தி எடுத்து மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். இவரை சக ஊழியர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறியுள்ளனர். இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் இறப்பிற்கான காரணம் தெரியவரும்.