
தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே நேற்று நடைபெற்ற விபத்தில் லோடு ஆட்டோ ஒன்று கவிழ்ந்து மூன்று பெண்கள் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விவசாய தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சென்ற லோடு ஆட்டோ ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் ஜானகி (52), வள்ளியம்மாள் (60), பிச்சி (60) ஆகிய மூன்று பெண்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 12 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.