ராஜ்கோட்டில் நடைபெற்ற வரும் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து மருத்துவ அவசர சூழல் காரணமாக சுழற் பந்துவீச்சாளர் அஸ்வின் விலகியுள்ளார். இது குறித்து பிசிசிஐ வெளியிட்ட செய்தி குறிப்பில், கடினமான சூழலில் அஸ்வின் குடும்பத்திற்கு ஆதரவுடன் இருப்போம் என தெரிவித்துள்ளது. முன்னதாக டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த அஸ்வினுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.