லைவ் டிவியில் பெண் நிருபரை தகாத முறையில் தொட்ட நபர் கைது செய்யப்பட்டார்..

ஒவ்வொரு நாளும், உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான பெண்கள் ஏதோ ஒரு வகையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். இச்சம்பவங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்த பின்னரும் சிலர் துளியும்  துவண்டுவிடாமல், தற்போது பொதுவெளியில் இதுபோன்ற கேவலமான செயல்களை செய்ய ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது, அதில் ஒரு பெண் நிருபர் நேரடி செய்தியை  வழங்கி கொண்டிருக்கும்போது, அவருடன் ஒரு நபர் ஆபாசமான செயல்களில் ஈடுபடுவதைக் காணலாம். பட்டப்பகலில் பெண் மீது இந்தச் செயல் நடத்தப்பட்டுள்ளதால், இந்த வீடியோ மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.

வைரலான வீடியோ ஸ்பெயினில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண் நேரலையில் புகார் அளித்ததை வீடியோவில் காணலாம். ஸ்டுடியோவில் அமர்ந்திருந்த தொகுப்பாளர் கேள்விகளுக்கு அவள் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது பெண் நிருபரின் பின்னால் இருந்து வந்த ஒருவர் அவரது பின் பக்கத்தை தட்டிவிட்டு சென்று விட்டார். இந்த சம்பவத்திற்கு பிறகு அந்த பெண் சற்று அசௌகரியமாக உணர்ந்தார். இருப்பினும் அவர் தொடர்ந்து தனது பணியை செய்தார்.. தனக்கு எதுவும் ஆகாதது போல் நடந்துகொண்டார். ஆனால் தொகுப்பாளர் இதையெல்லாம் நன்றாக உணரவில்லை. எனவே அவர் பெண் பத்திரிகையாளரிடம் கேமராவில், “அந்த மனிதர் உங்களை அநாகரீகமாகத் தொட்டாரா?” என்று கேட்கிறார். இந்தக் கேள்விக்கு அந்தப் பெண் “ஆம்” என்று பதிலளித்தார்.

ஒரு நபர் கேமராவைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார் :

இதற்குப் பிறகு, தொகுப்பாளர் பத்திரிக்கையாளர் ஈசாவிடம், அருகில் நிற்கும் நபரிடம் பேசச் சொன்னார், இதனால் அவரது அடையாளத்தை வெளிப்படுத்த முடியும். இதற்குப் பிறகு, அந்தப் பெண் அவரிடம் பேசி அவனுடைய செயல்கள் குறித்து கேள்விகளை எழுப்புகிறார். நிருபர் ஈஷா, தான் எந்தச் சேனல் என்று தெரிந்துகொள்ள என்னைத் தொட்டிருக்க வேண்டுமா என்று கேட்டார். நான் லைவ் ஷோ செய்து, வேலை செய்கிறேன் என்றார். இருப்பினும், அந்த நபர் சாரி.. தான் எதையும் செய்யவில்லை என்று மறுக்கிறார். அதற்கு ஆம் நீ என் புட்டத்தைத் தொட்டாய்.. நீங்கள் என்னை வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று உண்மையில் நான் விரும்புகிறேன் என தெரிவித்தார். அவர் தனது செயல்களுக்கு வெட்கப்படவில்லை. கேமராவைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார். பின் அவன் நிருபரின் தலையைப் பிடித்துவிட்டு அங்கிருந்து சென்றான். சில நிமிடங்களுக்குப் பிறகு அவன் மீண்டும் அங்கு வந்து நிருபரை சந்தித்தான்.

போலீசார் கைது செய்தனர் :

இந்த வீடியோ வைரலாக பரவியதையடுத்து, அந்த நபரை மாட்ரிட் போலீசார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது, அதில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் அவரை பிடித்து அழைத்துச் செல்லும் காட்சிகள் காணப்படுகின்றன.