
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்ட ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, மக்களின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் போன்றவைகள் குறித்து நான் கேட்டறிந்துள்ள நிலையில், கள ஆய்வில் சுணக்கம் ஏற்பட்டுள்ள திட்டப் பணிகள் குறித்து கண்டறியப்பட்டுள்ளது. திட்டங்களை முழுமையாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பு அதிகாரிகளுடையது.
நிர்வாகம் நல்ல முறையில் மேம்படுவதோடு அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் மக்களிடம் நல்ல முறையில் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு திட்டமும் பல கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் அரசு நிதி மட்டுமின்றி கடன் வாங்கியும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. எனவே திட்டங்களை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்படக்கூடாது. மேலும் பட்டா மாறுதல் போன்றவைகளுக்கு மக்கள் அலைக்கழிக்கப்படுவதை மாவட்ட ஆட்சியர்கள் தடுக்க வேண்டும் என்று கூறினார்.