
ஆப்பிரிக்க நாடான சூடான் உள்நாட்டு போரினால் கடுமையான அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது. அதாவது நாட்டில் உள்ள இரு வேறு ராணுவ பிரிவுகளான SAF மற்றும் RSF படைகளுக்கிடையே கடந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் மோதல் ஏற்பட்டது. ஆட்சியை யார் கைப்பற்றுவது என்ற நோக்கில் இரு ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் போராக மாறியுள்ளது. இந்த போரில் சுமார் 1,50,000 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 11 மில்லியன் பேர் பஞ்சத்தினால் இடம்பெயர்ந்துள்ளனர். இந்நிலையில் RSF ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் பல பகுதிகள் அமைந்துள்ளது. இந்த பகுதிகளில் உள்ள பெண்கள் தினம்தோறும் ராணுவ வீரர்களால் பாலியல் பலாத்காரம் செய்வதாக தற்போது அதிர்ச்சி செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. இது தொடர்பாக கார்டியன் நாளிதளிடம் பாதிக்கப்பட்ட பெண்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
அதாவது உணவு மற்றும் பிற அத்தியாவசிய தேவைகளுக்காக பெண்கள் தினசரி வரிசையில் பாலியல் பலாத்காரம் செய்வதற்காக காத்திருக்கிறார்கள். அப்படி ராணுவ வீரர்களுடன் உடலுறவு வைத்தால்தான் அந்தப் பெண்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு வேண்டிய உணவு உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்கள் கிடைக்கும். இதனால் வேறு வழி இன்றி பெண்களும் தினந்தோறும் வரிசையில் காத்து நிற்கிறார்கள். போரினால் கைவிடப்பட்ட வீடுகளில் ராணுவ வீரர்கள் முகாமிட்டுள்ளனர். அங்கு வைத்து தினசரி வரிசையில் காத்து நிற்குமாறு பெண்களிடம் கூறி பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள். இதற்கு மறுக்கும் பெண்களை கடுமையாக அடித்து துன்புறுத்துகிறார்கள். தங்கள் குழந்தைகளுக்கு உணவு வேண்டும் என்பதற்காக பெண்களும் இப்படி செய்கிறார்கள். மேலும் இதற்கு மறுப்பு தெரிவித்த ஒரு பெண்ணின் கால்களை எரித்ததாக பாதிக்கப்பட்ட அந்தப் பெண் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.