பிரதமர் நரேந்திர மோடியால் 2015-16ஆம் வருடம் மூத்த குடிமக்களுக்காக அடல் பென்ஷன் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டது. பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு பொருளாதார ரீதியாக பாதுகாப்பு வழங்குவதை நோக்கமாக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தில் மாதம் தோறும் ஒருவருக்கு 5000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படுகிறது. அடல் பென்ஷன் யோஜனாவின் ஒரு சிறிய தொகையை டெபாசிட் செய்வதன் மூலமாக ஓய்வுக்கு பிறகு மாதாந்திர ஓய்வு திட்டத்தை பயனாளர்கள் பெற்றுக் கொள்ளலாம். 60 வருடங்களுக்கு பிறகு இந்த திட்டத்தில் டெபாசிட் செய்பவர்கள் ஓய்வூதியம் பெறலாம்.

இந்த திட்டத்தின் மூலமாக முறையான ஓய்வூதிய திட்டம் இல்லாத சிறு வணிகர்கள், சுயதொழில் செய்பவர்கள், தினசரி ஊதியம் பெறுபவர்கள் பலனை பெற முடியும். 18 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் யார் வேண்டுமானாலும் இந்த திட்டத்தில் டெபாசிட் செய்யலாம். குறைந்த அளவில் 7 ரூபாய் முதலீடு செய்து இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். அதாவது தினமும் 7 ரூபாய் விதம் மாதம் தோறும் 210 முதலீடு செய்யலாம். இதன் மூலமாக 60 வயது எட்டும் போது மாத ஓய்வூதியமாக 5000 ரூபாய் பெறலாம். 40 வயதில் இந்த திட்டத்தில்  இணைந்தால் மாதம் 5 ஆயிரம் பெறுவதற்கு 1454 பிரீமியம் செலுத்த வேண்டும்.  இந்த திட்டத்தில் 42 முதல் 210 ரூபாய் வரை மாதம் செலுத்தலாம்.