வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் குமரி ஆனந்தன் உடல் நலக்குறைவின் காரணமாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரை காண்பதற்காக அவருடைய மகளும் தமிழக பாஜக கட்சியின் மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தர்ராஜன் சென்றார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை எதற்கெடுத்தாலும் பாஜகவை தான் குற்றம் சொல்கிறார்.

யார் வீட்டிலாவது சமையல் செய்ய முடியவில்லை என்றால் கூட அதற்கும் பாஜக தான் காரணம் என்பார். சமையல் செய்ய வில்லை என்றால் கூட பாஜகவினர் சதி செய்து விட்டார்களோ என்று சொல்லக்கூடிய அளவுக்கு அவர் சென்று விட்டார். அவர் திருப்பரங்குன்றத்திற்கு செல்ல முற்பட்டதாகவும் ஆனால் முதல்வர் ஸ்டாலின் தடுத்ததால் அங்கு செல்லவில்லை என்றும் கூறியுள்ளார். பாஜகவை பார்த்து பி டீம் சி டீம் என்றெல்லாம் விமர்சனம் செய்கிறார்கள். மேலும் நான் இப்போது சொல்கிறேன் திமுகவின் ஏடிடீம் காங்கிரஸ் தான் என்று கூறினார்.