தமிழக முதல்வர் ஸ்டாலின் குடும்ப உறுப்பினர்கள் பெயரை தவறாக பயன்படுத்திய புகாரில் திமுக பொறுப்பாளரும் நடிகருமான ராஜ்மோகன் குமார் திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். கோவை மேட்டுப்பாளையம் காரமடை நகராட்சியில் தூய்மை பணிக்கு டெண்டர் மற்றும் பனியன் வர்த்தகம் உள்ளிட்டவற்றில் கட்சி -துர்கா ஸ்டாலின் சகோதரர் பெயரை பயன்படுத்தியதால் களவாணி 2 திரைப்படத்தில் நடித்த ராஜ்மோகன் கட்சியில் இருந்து தற்போது நீக்கப்பட்டுள்ளார்