சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, ஒரு மொழியை அழித்தால் அது பிராந்தியத்தை அழிக்க முடியும் என்று துணை குடியரசு தலைவர் சொல்கின்றார். ராஜீவ் காந்தியின் காலத்தில் இருந்து காங்கிரஸ் ஆட்சி இருக்கும் வரை இரு மொழிக் கொள்கையில் உறுதியாக இருந்தோம். அண்ணாமலை 100 சதவீதம் கல்விக்கான நிதியை கொடுத்து விட்டோம் என்று சொல்கின்றார். அதற்கு அவர் வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா? தமிழகத்தை பாஜக புறக்கணிக்கிறது. ஆன்மீகத்தை அரசியலில் கலப்பதும் ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்வதும் பாஜகவின் வழக்கம்.

இருமொழிக் கொள்கையில் படித்தவர்கள் உலகில் பல்வேறு நாடுகளில் உள்ளனர். இரு மொழி கொள்கை உலகத்திற்கு வழிகாட்டுகின்ற மொழி என்று கூறியுள்ளார். காமராஜர் ஆட்சியை பார்க்காத மற்றும் படிக்காதவர் அதனை மற்றவைகளுடன் ஒப்பிடுவது தவறு என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கடந்த வாரம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த நிலையில் இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த செல்வ பெருந்தகை, ஒவ்வொருவருக்கும் ஒரு மாடல் ஆட்சி இருக்கும், திமுகவிற்கு திராவிட மாடல் ஆட்சி போல காங்கிரஸ் கட்சிக்கு காமராஜர் ஆட்சி. காங்கிரஸ் வந்தால்தான் காமராஜர் ஆட்சி என்று இல்லை. நல்லாட்சி எங்கெல்லாம் நடைபெறுகிறதோ அதுவும் காமராஜர் ஆட்சி தான். மாணிக்கம் தாகூர் புரிதல் இல்லாமல் பேசுகிறார் என செல்வ பெருந்தகை கூறியுள்ளார்.