
திமுக செயற்குழு கூட்டத்தின் போது 200 தொகுதிகளில் வெல்வதுதான் இலக்கு என்று முதல்வர் ஸ்டாலின் கூறிய நிலையில் அதற்காக திமுக தொண்டர்கள் இப்போது இருந்தே உழைக்க வேண்டும் என்றார். இதே போன்று திமுக செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் 200 தொகுதிகளில் வெல்வதுதான் நம்முடைய இலக்கு என்றார். இது பற்றி அவர் மேலும் பேசியதாவது, தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சந்தித்த எந்த ஒரு தேர்தலிலும் தோல்வியை சந்திக்கவில்லை.
எனவே அடுத்து வரும் தேர்தலிலும் கண்டிப்பாக திமுகவை வெற்றி பெற வைக்க வேண்டும். 2026 இல் 200 தொகுதிகளில் வெல்வதுதான் நம்முடைய இலக்கு. அதன் பிறகு திமுகவுக்கு பெண்களின் ஆதரவு என்பது மிக அதிக அளவில் இருக்கிறது. சமூக வலைதளங்களில் திமுகவை வலுப்படுத்த வேண்டும். ஒவ்வொரு அணியும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் வெற்றிக்காக பாடுபட வேண்டும் என்று கூறினார். மேலும் தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு மகளிர் உரிமைத்தொகை மற்றும் இலவச பேருந்து பயணம் என்ற பெண்களுக்கு சிறப்பு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதால் திமுகவுக்கு பெண்களின் ஆதரவு அதிகமாக இருப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.