
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மதுவுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக அதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்தார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது, பட்டியலினத்திலிருந்து தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தை வெளியேற்றி அவர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை அப்படியே கொடுக்க வேண்டும். அதுவே தமிழ் தேசத்தின் விடுதலை.
இதை நீங்கள் செய்யவில்லை என்றால் ஒரு நாள் அதிகாரத்திற்கு வரும்போது அதை நாங்கள் செய்வோம். வேளாளர் என்பதே எங்களின் குடி பெயர். எந்த தமிழ் சாதியில் பாண்டியன் என்னும் பெயர் இல்லை என்பதை கூறுங்கள். மது ஒழிப்புக்கு எதிராக இருந்தவர் ராமதாஸ். டாஸ்மாக்கை மூடுபவர்களுடன் கூட்டணி என்று சொல்லியிருப்பதை கண்டிருப்பீர்கள். அப்புறம் என்ன ஆனது? திருமாவளவன் அதிமுகவுடன் இணைந்து மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்துவார்.
அப்படி இருக்க மீண்டும் டாஸ்மாக்கை திறக்க தானே செய்வார்கள். திமுகவுடன் இருந்து கொண்டு திருமாவளவன் டாஸ்மாக்கை எதிர்த்து போராட்டம் நடத்தலாமா? விற்பனை குறைவானதற்கு டாஸ்மாக் ஊழியர்களை சஸ்பெண்ட் செய்தது திமுக அரசு. நாம் தமிழர் கட்சிக்கு 5 ஆண்டுகள் வாய்ப்பு கொடுத்தால் தமிழக மீனவனை இலங்கை கடற்படை தொட்டு விடுவானா? என்று பார்க்கலாம். அப்படி தொட்டால் அன்னைக்கே பதவி விலகி விடுவேன் என தெரிவித்துள்ளார்.