
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் மற்றும் எம்எல்ஏ நத்தம் விஸ்வநாதன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் நிருபர்கள் விஜய் பற்றி கேட்டபோது விஜய் இன்னும் தன் செல்வாக்கை நிரூபிக்கவில்லை.அவர் தேர்தலில் போட்டியிட்டால் அவரைப் பற்றி கருத்து சொல்லலாம் இப்போதைக்கு அவரைப் பற்றி கருத்து சொல்ல எதுவும் இல்லை. கூட்டணி தொடர்பாக தேர்தல் சமயத்தில் தான் அறிவிக்க முடியும் என்று கூறினார்.
அதன்பிறகு திமுகவையும் முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்தார். இது பற்றி அவர் கூறியதாவது, ஊழலும் திமுகவும் கூடவே பிறந்தது. திமுக என்றாலே ஊழல் என்றுதான் அர்த்தம். இது இரண்டையும் தனித்தனியாக பிரித்து பார்க்க முடியாது. 2026 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக அரசுக்கு எதிராக மக்கள் வாக்களிப்பார்கள். மேலும் இன்று அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏற்பட்ட அதே கதி தான் நாளைக்கு திமுகவுக்கும் ஏற்படும் என்று கூறினார்.