திமுகவை எதிர்க்கும் திராணியுள்ள ஒரே கட்சி அதிமுக தான் என எடப்பாடி  பழனிச்சாமி கூறியுள்ளார்.

மா.செ கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பின் வெற்றி பெற்றதாகவும், தமிழகத்தில் ADMK பிரதான எதிர்கட்சியாக செயல்படும் என்று கூறிய அவர், கட்சியை மதிக்கும் அனைவரையும் இணைத்துக்கொள்வோம், மற்றவர்களை பற்றி பேசி இனி எங்களது காலத்தை வீணாக்கமாட்டோம்.

திமுகவை எதிர்க்கும் திராணியுள்ள ஒரே கட்சி அதிமுக தான்’ என இபிஎஸ் கூறியுள்ளார். இனி குழப்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை, தேனீயை போல உழைத்து தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று கூறிய அவர், ஆட்சி மாற்றம் என்பது இயற்கை, அதிமுக எந்த இடத்திலும் வீழ்ச்சி அடையவில்லை என்றும் எதிர்கட்சி துணை தலைவர் விவகாரத்தில் பேரவைத் தலைவருக்கு மீண்டும் கடிதம் அளிப்போம் எனவும் கூறினார்.