
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவருடைய கட்சியை உயர்வாக சொல்வதில் தவறு கிடையாது. அதே சமயத்தில் மற்ற கட்சி தலைவர்களையும் அவர் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, விஜய் தன்னுடைய மாநாட்டு அழைப்பு கடிதத்தில் நம்முடைய கட்சி மற்ற கட்சிகளைப் போன்று சாதாரண கட்சி அல்ல என்று கூறியுள்ளார். எத்தனையோ கட்சிகள் ஆண்ட கட்சிகளாக பல காலங்களாக அரசியலில் இருக்கிறது.
அதே சமயத்தில் உங்களுடைய கட்சி புதிய கட்சிதான். எனவே உங்கள் கட்சியை உயர்த்தி சொல்வதில் தவறு கிடையாது. அதே நேரத்தில் மற்ற கட்சிகளையும் கட்சி தலைவர்களையும் விஜய் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு குட்டி திராவிட கட்சியைப் போன்று தான் அவருடைய கட்சி இருக்கிறது. பெரியாரையும் கும்பிடுகிறார்கள். கடவுளையும் கும்பிடுகிறார்கள். நேரம் காலம் பார்த்துதான் எல்லாத்தையும் செய்கிறார்கள். மேலும் திமுக கட்சி என்னவெல்லாம் செய்கிறதோ அதைப் பின்பற்றியே தமிழக வெற்றிக்கழகமும் செயல்படுகிறது என்று கூறினார்