
தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். அதன் பிறகு நல்லாட்சிக்கு நல்லாதரவு கொடுக்கும் விதமாக மக்கள் எங்களுக்கு மிகப்பெரிய அளவில் அங்கீகாரத்தை தர இருக்கிறார்கள்.
திமுக ஆட்சி பொறுப்பை ஏற்ற 22 மாதங்களில் தமிழ்நாட்டில் பயன் பெறாத மக்களே இல்லை என்று பெருமிதத்துடன் கூறினார். மேலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் என்னப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் திமுக கூட்டணியான காங்கிரஸ் கட்சி போட்டியிட உள்ள நிலையில் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.