
திருநெல்வேலியில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுக ஆட்சியில் கிட்டத்தட்ட 3 வருடங்களாக மாவட்டம் தோறும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வேலை வாய்ப்பு முகாம்கள் மூலம் இதுவரை 6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு எந்தவிதமான திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளுக்கு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் வெற்றி தான் பதிலடி.
பொதுவாக எதிர்க்கட்சிகளுக்கு தான் சட்டமன்றத்தில் 70% வரை பேசுவதற்கு வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. திமுகவை சேர்ந்த 162 எம்எல்ஏக்கள் இருக்கும் நிலையில் அதிமுகவில் 66 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். மேலும் திமுக எம்எல்ஏக்கள் இரு மடங்கு இருந்தாலும் கூட அதிமுகவை சேர்ந்த எம்எல்ஏக்களுக்கு தான் அதிக அளவில் பேசுவதற்கு வாய்ப்புகள் வழங்கப்படுகிறது என்றார்.