
தமிழகம் முழுவதும் இன்று பாமக கட்சியின் சார்பில் வன்னியர்களுக்கான 15 சதவீத இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட அன்புமணி ராமதாஸ் பேசியதாவது, நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும் நிலையில் தமிழக அரசு மட்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மறுக்கிறது. இதுவே வன்னியர்களுக்கு எதிரான வன்மம் தான். திமுக இன்று ஆட்சியில் இருக்க வன்னியர்கள் ஒரு முக்கிய காரணம் என்பதை அவர்கள் மறந்துவிடக்கூடாது. வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த துரைமுருகன் திமுக கட்சிக்காக உழைத்து பலமுறை ஜெயிலுக்கு போயிட்டு வந்தவர்.
அவருக்கு துணை முதல்வர் பதவியாவது வழங்கி இருக்கலாம். ஆனால் அவர் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் திமுகவுக்கு அந்த மனசு வராது. அதன் பிறகு திமுக அரசு மட்டும் வன்னியர்களுக்கான 15 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்து விட்டால் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் அடுத்தவரும் தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவை பாமக கொடுக்கும் என்றார். திமுக வன்னியர் உள் இட ஒதுக்கீடு கொடுத்து விட்டால் வருகிற தேர்தலில் பாமக சார்பில் திமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கப்படும் என்று கூறினார். மேலும் திமுகவுக்கு சமூக நீதி என்பது இல்லை எனவும் தொடர்ந்து வன்னியர்களை அவர்கள் வஞ்சிப்பதாகவும் கூறினார்.