அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் நடைபெற்ற அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் அடிக்கடி சேலத்திற்கு வந்து செல்கிறார்கள். அவர்கள் எத்தனை முறை வந்து சென்றாலும் சேலம் அதிமுகவின் கோட்டைதான். அதனை யாராலும் மாற்ற முடியாது என்றார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு விட்டதாக கூறினார். இது தொடர்பாக அவர் பேசும்போது, விசிக ஒரு கோரிக்கை வைக்கிறது. இடதுசாரிகள் மற்றொரு கோரிக்கை வைக்கிறது.

திமுக கூட்டணி புகைய ஆரம்பித்துவிட்டது. கூட்டணியில் புயல் கிளம்பி விட்டது. இது எப்படி விளாசும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்றார். அதன் பிறகு நடிகர் விஜய் ஒரு முன்னணி நடிகர். அவருக்கென கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. பொது சேவை செய்வதற்காக தான் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். ஆனால் திமுகவினர் பயத்தில் விஜயின் முதல் மாநாட்டுக்கு தடை விதிக்கிறார்கள். இதேபோன்று அதிமுக நடத்தும் போராட்டங்களுக்கும் தடை விதிக்கிறார்கள். மேலும் தமிழக வெற்றி கழகத்திற்கு மட்டுமின்றி எந்த ஒரு கட்சிக்கும் அவர்கள் அனுமதி கொடுப்பதில்லை என்றும், திமுக கூட்டணி புகைய ஆரம்பித்துவிட்டது என்றும் கூறியுள்ளார்.