
அதிமுக கட்சியின் பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுகவும் பாஜகவும் ரகசிய உறவு வைத்துள்ளது. இதனை நடிகர் ரஜினிகாந்த் உறுதிப்படுத்தியுள்ளார். திமுகவும் பாஜகவும் வெளியே உறவு இல்லாதது போன்று மறைமுகமாக விமர்சித்துக் கொள்கிறார்கள். ஆனால் அவர்களுக்குள் மறைமுகமாக ரகசிய உறவு இருப்பதை ரஜினிகாந்த் உறுதிப்படுத்தி விட்டார் என்றார். மேலும் கலைஞர் தாய்நூல் வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று கலந்து கொண்ட நிலையில் அவர் முதல்வர் பற்றியும் கலைஞர் கருணாநிதியைப் பற்றியும் புகழ்ந்து பேசினார்.
அதோடு ஸ்டாலினின் ஆளுமை மற்றும் உழைப்பு போன்ற காரணங்களால்தான் அவர் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றதாகவும் கூறினார். ஏற்கனவே ரஜினிகாந்த் பாஜகவுக்கு ஆதரவு கொடுத்து வருவதாக கூறப்படும் நிலையில் தற்போது திமுகவை புகழ்ந்து அவர் பேசியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியுள்ள நிலையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி பாஜக மற்றும் திமுக இடையே ரகசிய உறவு இருப்பதாகவும் அதை நடிகர் ரஜினிகாந்த் வெளிப்படையாக கூறிவிட்டார் எனவும் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.