
திருவள்ளுவர் மாவட்டம் சோழவந்தான் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக அபிஷா பிரியவர்ஷினி (33) பணியாற்றி வருகிறார். இவரது கணவர் ஜெகன். திமுக பிரமுகரான இவரது வீட்டில் சுதந்திர தினமான நேற்று சில மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசி உள்ளனர். இந்த வெடிகுண்டு வீட்டின் வெளிப்புற கேட்டின் விழுந்ததையடுத்து உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் வெடித்த நாட்டு வெடிகுண்டால் ஜன்னல் கண்ணாடி உள்ளிட்டவை சேதமடைந்துள்ளது.

இந்த சத்தத்தை கேட்ட அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தபோது 5 பேர் கொண்ட கும்பல் முகமூடி அணிந்து நிறுள்ளனர். அப்போது திடீரென அந்த கும்பல் வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். அதன்பின் அந்த கும்பல் அருகிலிருந்த லாரி செட்டுக்கு சென்று ஓட்டுநர் சிவா என்பவரிடம் மாமுல் கேட்டு மிரட்டியதுடன் அங்கு வெடிகுண்டை வீசிவிட்டு சென்றுள்ளனர்.
இதைத்தொடர்ந்து அந்த கும்பல் சிறுணியம் காலனி என்ற பகுதியில் வசிக்கும் சரண்ராஜ் என்பவரின் காரை உடைத்துடன் அங்கிருந்தவர்களை கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர். அதன்பின் இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர தேடுதலுக்கு பின்பு 4 பேரை கைது செய்தனர். மேலும் காவல்துறையினர் இச்சம்பவத்தை பற்றி அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.