தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பஞ்சா குட்டா என்ற பகுதியில் ஒரு தியேட்டர் அமைந்துள்ளது. இங்கு  ரசிகர்கள் நடிகர் பிரபாஸின் கல்கி 2898 ஏடி‌ திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் திடீரென பலத்த மழை பெய்தது. அப்போது தியேட்டரின் மேற்கூரையில் ஓட்டை இருந்ததால் உள்ளே தண்ணீர் வந்தது.

இதனால் ரசிகர்கள் ஆவேசமாக கூச்சலிட்டதோடு நிர்வாகத்தினருடன் கோபத்தில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதோடு இதனால் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பார்கள் என்றும் கேள்வி எழுப்பினர். இதனால் படம் பாதியில் நிறுத்தப்பட்டது. மேலும் படம் பார்க்க விருப்பமில்லை என்றால் வெளியேறி விடுங்கள் என்று நிர்வாகத்தினர் கூறினர். இதனால் வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.