
சித்தா படம் இயக்குனர் அருண்குமார். இவர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான படம் வீரதீர சூரன். இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யா, துஷாரா விஜயன் உள்ளிட்டபலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டது இந்த படம். ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு ட்ரீட்டாக அமைந்துள்ளது. திரைப்படம் வெளியாகி ஒரு வாரம் முடிந்த நிலையில் 37 கோடி வசூலித்துள்ளது. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய அருண்குமார் திரையரங்கில் மொபைல் யூஸ் செய்பவர்கள் பற்றிய கருத்தை பதிவிட்டுள்ளார்.
திரையரங்கில் மொபைலை எடுத்து போட்டோ எடுப்பவரை பார்த்தால் கோபம் வரும். திரையரங்கில் படம் ஆரம்பித்த பிறகு படத்தின் காட்சிகளை செல்போனில் படம் பிடிப்பது, ஸ்டேட்டஸ் வைப்பது, இதில் ஸ்நாக்ஸ் சாப்பிடுவது, படம் ஆரம்பித்த பிறகு டார்ச் அடித்துக் கொண்டு சீட்டை தேடுவது போன்ற செயல்கள் அதிருப்தி அளிக்கிறது. மக்கள் படத்தை உன்னிப்பாக கவனித்தால் தான் கதை ஓட்டம் புரியும்” என்று கூறியுள்ளார்.