சென்னையில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டு பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், இன்று சில பேர் திராவிட மாடல் என்றால் என்ன? திராவிட மாடல் அரசு என்றால் என்ன? என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்னாருக்கு மட்டும்தான் இது என்பதற்கு எதிராக எல்லோருக்கும் எல்லாம் என்று சொல்வது தான் உண்மையானது திராவிடம் மாடல் அரசு. இந்த இலக்கை நோக்கி தான் நம்முடைய முதல்வர் தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். ஒரு மனிதனுக்கு அடிப்படைத் தேவை என்று மூன்று விஷயங்கள் உள்ளதாக சொல்வார்கள். அதாவது உண்ண உணவு, உடுத்த உடை மற்றும் இருக்க இடம் என்ற இந்த மூன்று விஷயங்களுக்காக தான் நாம் அனைவரும் பாடுபட்டு உழைத்துக் கொண்டிருக்கின்றோம்.

இந்த மூன்று விஷயத்தையும் ஒரு மனிதனுக்கு உறுதி செய்வது தான் தமிழக முதல்வரின் திராவிட மாடல் அரசு. இது தெரியாமல் திராவிட மாடல் அரசு பற்றி பலர் பலவிதமான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். திராவிட இயக்கம் தான் நம் ஒவ்வொருவருக்கும் முகவரியை வழங்கிக் கொண்டிருக்கக் கூடிய இயக்கம். திராவிட இயக்கமில்லாமல் போயிருந்தால் நாம் இன்னும் முகவரி இல்லாமல் கல்வி மற்றும் வேலைவாய்ப்பற்ற மனிதர்களாகத்தான் இருந்திருப்போம். திராவிட இயக்கம் வந்த பிறகுதான் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தமிழகம் ஒரு தன்னிறைவு நிலையை அடைந்துள்ளது என சொல்லலாம் என உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.