
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறிவரும் நடிகை விஜயலட்சுமி அடிக்கடி வீடியோ வெளியிட்டு சீமானை விளாசுகிறார். குறிப்பாக ரஜினிகாந்தை சீமான் சந்தித்தபோது முதலில் விஜய் வீட்டில் பிச்சை எடுத்து பார்த்தாச்சு அது வேலைக்காகவில்லை என்றவுடன் தற்போது ரஜினி வீட்டில் பிச்சை எடுப்பதற்காக சென்றுள்ளார் என்று விஜயலட்சுமி சீமானை விமர்சித்தார். இந்நிலையில் சீமான் தொடர்ந்து பெரியாரை விமர்சித்து வரும் நிலையில் தற்போது விஜயலட்சுமி ஒரு புது வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில் பெரியார் யார் என்றே உங்களுக்கு தெரியாதா.? சரி பெரியார் யார். அவர் தமிழ்நாட்டுக்கு என்னவெல்லாம் செய்தார் என்பதை பெரியாரிஷ்டுகள் வந்து உங்களுக்கு சொல்வாங்களா. திராவிட மாடல் என்பது திருட்டு மாடலா.? கண்டிப்பாக உங்களை நான் ஒரு நாள் ஜெயிப்பேன். அப்போ உங்களை எல்லாம் உண்டு இல்லைன்னு பண்ணிடுவேன்னு சொன்னீங்க. அப்படியா கிடையவே கிடையாது. உங்களால இந்த ஜென்மத்துல ஜெயிக்கவே முடியாது. என்னோட சாபம் உங்களை ஜெயிக்க விடாது. தொண்டை வற்றவற்ற கத்தினால் ஜெயித்து விடுவோம் என்று நினைக்கிறீர்களா. கண்டிப்பாக உங்களால் ஒருபோதும் ஜெயிக்கவே முடியாது என்று கூறியுள்ளார்.