நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள். பின்பு நாக சைதன்யா சோபிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமந்தா இன்னும் திருமணம் செய்துகொள்ளாமலேயே இருக்கிறார். இதற்கிடையில் சமந்தா மையோ சிட்டிஸ் எனும் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு சில காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

அதன் பிறகு நோயிலிருந்து குணமடைந்து மீண்டும் பிஸியாக படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். சமீபத்தில் சிட்டாடல் ஹனி பனி என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது மும்பையில் தான் செட்டில் ஆகி இருக்கிறார் சமந்தா. இடையிடையே அவர் அவ்வப்போது ஜிம் வீடியோக்கள், தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவது வழக்கம். எப்போதுமே சமந்தா ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளிப்பார். அந்த வகையில் தற்போது ரசிகர் ஒருவர் சினிமாவில் உங்களுக்கு பிடித்த ஹீரோயின் யார்? என்று கேட்டுள்ளார். அதற்கு சமந்தா உள்ளொழுக்கு படத்தில் நடித்த பார்வதி, சூட்சமதர்ஷினி படத்தில் நடித்த நஸ்ரியா, அமரன் படத்தில் நடித்த சாய் பல்லவி,  ஆலியா பட், அனன்யா பாண்டே ஆகியோரின் நடிப்பு என்னை கவர்ந்தது “என்று கூறியுள்ளார்.