திருச்சியை சேர்ந்த முத்துவேலன் என்ற மீனவர் அபுதாபியில் உள்ள எல்லை பகுதியான சிலாவில் வேலை செய்து வந்தார். இவர் தன்னுடைய ஆவணங்களின் காலம் முடிந்த பின்னரும் 8 வருடங்களாக தனது சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்துவந்துள்ளார்

விசா மற்றும் பாஸ்போர்ட் இல்லாமல் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த தமிழக மீனவரின் நிலை குறித்து அபுதாபியில் உள்ள தமிழ் மக்கள் மன்றத்திற்கு தெரியவந்தது. பின்னர் தமிழ் மக்கள் மன்றம் சார்பில் இந்திய தூதரகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையறிந்த இந்திய தூதரகம், முத்துவேலன் தனது சொந்த ஊருக்கு செல்ல தேவையான உதவிகளை செய்தது. இதனைத்தொடர்ந்து அமீரக தமிழ் மக்கள் மன்றம் முத்துவேலனுக்கு விசா, விமான டிக்கெட்டுகள் மற்றும் செலவுக்கு பணம் ஆகியவற்றை கொடுத்து உதவி செய்தனர். இதனால் முத்துவேலன் கண்ணீருடன் அமீரக தமிழ் மக்கள் மன்றத்திற்கும், தூதரக அதிகாரிகளுக்கு நன்றி கூறினார்.