திருடு போன செல்போனை கண்டுபிடித்து மீட்க மத்திய தொலைதொடர்பு துறையின் கீழ் இயங்கும் மத்திய சாதன அடையாள பதிவுத்துறை உதவுகின்றது. இதற்காக அந்த துறை https://www.ceir.gov.in/Home/index.jao என்ற இணையதளத்தை ஏற்படுத்தித் தந்துள்ளது. செல்போனை தொலைத்தவர் தங்கள் செல்போனை மீண்டும் கண்டுபிடிக்க அந்த இணையதளம் சென்று அதில் உள்ள விண்ணப்பத்தை முதலில் நிரப்ப வேண்டும்.

விண்ணப்பத்தில் செல்போனில் IMEI நம்பர் மற்றும் மொபைல் எண்ணை நிரப்பி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் நகலை பதிவேற்றம் செய்ய வேண்டும். இதனை செய்ததும் IMEI நம்பரை CEIR முடக்கும். அதில் உள்ள மொபைல் எண்ணையும் பயன்படுத்த முடியாத படி செய்யும். இதை தெரியாத நபர் இன்னொரு சிம் கார்டை வைத்து பயன்படுத்தும் போது அதன் IMEI மூலம் செல் தவறை வைத்து கண்டுபிடித்து CEIR க்கு செல் நிறுவனங்கள் தகவல் அளிக்கும்.

CEIR உடனடியாக செல்போன் இருக்கும் பகுதியில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கும். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அங்கு சென்று திருடப்போன செல்போன் வைத்திருப்பவரை பிடித்து செல்போனை மீட்கும். செல்போன் மீட்கப்பட்டதும் IMEI எண்ணை முடக்கி வைத்ததை CEIR நீக்கி பயன்பாட்டுக்கு கொண்டு வரும். இதனைத் தொடர்ந்து அந்த செல்போன் அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்ட வழக்கம் போல அவர் பயன்படுத்தலாம்.