
இந்திய – நேபாள எல்லை வழியாக இரண்டு சீனர்கள் இந்தியாவுக்குள் நுழைய முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் கூறுகையில் சீன நாட்டில் உள்ள ஜியான்சி மாகாணத்தை சேர்ந்த எபியூ காங், ஜாவோ ஜிங் ஆகிய இருவரும் இந்திய நேபாள எல்லை வழியாக நேற்று இரவு இந்தியாவுக்குள் நுழைய முயற்சித்துள்ளனர் இந்தியா வருவதற்கு எந்த ஒரு ஆவணங்களும் அவர்களிடம் இல்லாத நிலையில் காவல்துறையினர் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுபோன்று சட்டத்திற்கு விரோதமாக இந்திய எல்லைக்குள் நுழைய முயற்சிப்பது முதல் முறையல்ல. இவர்கள் கடந்த இரண்டாம் தேதியும் இதேபோன்று முயற்சி செய்து கைது செய்யப்பட்டு பின்னர் எச்சரித்து விடுவிக்கப்பட்டனர். விசா இருந்தால் மட்டும் இந்தியாவில் உள்ள நுழைய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு அனுப்பப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.