
இந்தியாவில் தினசரி ஏராளமான பயணிகள் ரயிலில் செல்கிறார்கள். ஏனெனில் நீண்ட தூர பயணத்திற்கு ரயில் பயணம் என்பது சௌகர்யமாகவும் கட்டணம் குறைந்ததாகவும் இருப்பதால் பல பயணிகள் ரயில் பயணத்தையே விரும்புகிறார்கள். இந்நிலையில் பயணிகள் ஏசி பெட்டியில் செல்லும்போது அவர்களுக்கு தலையணை, போர்வை, டவல் போன்ற பொருட்கள் வழங்கப்படுகிறது. இவற்றை ரயில் பயணம் முடிந்த பிறகு பயணிகள் ரயிலில் வைத்து விட்டு செல்ல வேண்டும்.
ஒருவேளை பெட்ஷீட், தலையணை உள்ளிட்ட பொருட்களை உடன் எடுத்துச் சென்றால் பயணிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதாவது இந்த பொருட்களை சில பயணிகள் எடுத்து செல்வதாக இந்திய ரயில்வே நிர்வாகத்திற்கு புகார்கள் வரும் நிலையில் இதனால் ரயில்வே நிர்வாகத்திற்கு நஷ்டம் ஏற்படுகிறது. குறிப்பாக சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிலாஸ்பூர் ரயில்வே நிலையத்தில் மட்டும் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டுள்ளது. குறிப்பாக சுமார் ரூ.56 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டுள்ளது. மேலும் ரயில்வே பொருட்களை திருடுதல் மற்றும் சேதப்படுத்துதல் ஆகிய குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு குறைந்தபட்சம் 5 வருடங்கள் சிறை தண்டனையும் அபராதமும் வழங்கப்படுகிறது.