உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவில் திருடச் சென்ற இடத்தில் அசந்து தூங்கிய திருடனை போலீசார் கைது செய்தனர். லக்னோ பகுதியில் வசித்து வரும் பாண்டே என்பவர் வெளியில் சென்று இருந்த நிலையில் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவருக்கு போன் செய்தனர்.

உடனே அவர் போலீசார் உடன் வந்து வீட்டிற்குள் சென்று பார்த்த போது ஏசியை போட்டுவிட்டு தலகாணியை தலைக்கு கொடுத்து வசதியாக திருடன் தூங்கிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதே சமயம் அப்போது அவன் போதையில் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து திருடனை கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.