ஆந்திர மாநிலத்தில் சுப்பராயுடு ‌(45)-சரஸ்வதி (38) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு சுனில் குமார் என்ற 24 வயது மகன் ‌ இருக்கிறார். இவர் கடந்த 3 வருடங்களாக திருநங்கை ஒருவருடன் உறவில் இருந்துள்ளார். இந்நிலையில் சுனில் குமாருக்கு அவருடைய பெற்றோர் திருமணம் செய்து வைப்பதற்காக பெண் பார்த்துள்ளனர். ஆனால் சுனில் குமார் திருநங்கையை திருமணம் செய்து கொள்வேன் என்று கூறிவிட்டார்.

இதனால் பெற்றோருக்கும் மகனுக்கும் இடையே அடிக்கடி தகறாறு‌ ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சுனில்குமார் தற்கொலை முயற்சி கூட செய்துள்ளார். இதற்கிடையில் திருநங்கைகள் வைத்திருந்த 1.5 லட்சம் சுனில் செலவு செய்துள்ளார். இந்த பணத்தை சுனிலின் பெற்றோரிடம் திருநங்கைகள் கேட்டு பொதுவெளியில் அவமானப்படுத்தியதாக தெரிகிறது. இதனால் மன வேதனை அடைந்த சுனிலின் பெற்றோர் வீட்டில் பூச்சி மருந்தை குறித்து தற்கொலை செய்து கொண்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்