
திருப்பதியில் லட்டு பிடிப்பதற்கு ஆட்கள் தேவை என்று அறிவிக்கப்பட்ட அறிவிப்பானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இங்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்த லட்டுக்கு என்று தனி சுவை, மணம் உண்.டு சுத்தமான பசுநெய், முந்திரி, திராட்சை, ஏலக்காய், கற்கண்டு சேர்த்து தயாரிக்கப்படும் இந்த லட்டுக்கு ரசிகர் பட்டாளம் இருக்கிறது. திருப்பதிக்கு செல்லும் பக்தர்கள் இந்த லட்டை வாங்காமல் திரும்ப மாட்டார்கள். இந்த லட்டு பிரசாதம் திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் பொட்டு என்னும் மடப்பள்ளியில் ஆச்சாரமாக தயாரிக்கப்பட்டு வருகிறது.
தேவஸ்தானம் ஒரு நாளைக்கு ஒன்றரை லட்சம் லட்டுக்களை தயாரிப்பதாக கூறப்படுகிறது. தேவஸ்தானத்திற்கு ஊழியர்களை வழங்கும் ஸ்ரீ லட்சுமி சீனிவாச மேன் பவர் கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து வகை பிரசாதம் மற்றும் பணியாரம் தயாரிக்கும் பணியில் ஐந்து ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 21,139 ஊதியம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் குறிப்பாக வைஷ்ணவ பிராமணர்கள் மட்டுமே ஆகம விதிப்படி விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதான் சர்ச்சையை கிளப்பியுள்ளது.