
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே பயங்கர சாலை விபத்து நடந்தது. தாம்பரம் பகுதியில் இன்று காலை எண்ணெய் டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது சென்னையில் இருந்து திருப்பதி நோக்கி சென்று கார் அந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது மட்டும் தெரியவந்துள்ளது. மற்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை. இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.