வருகிற 21-ஆம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை திருப்பத்தூர் கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டம் திருப்பத்தூரில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் பகிர்மானம் அலுவலகத்தில் வைத்து நடைபெறுகிறது. இதில் மேற்பார்வை பொறியாளர் ரவி தலைமை தாங்கி பேசுகிறார். இந்நிலையில்  திருப்பத்தூர் கோட்டத்தை சேர்ந்த மின் நுகர்வோர் மற்றும் விவசாயிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு மின்வாரிய தொடர்பான தங்களது குறைகளை தெரிந்து பயன்பெற்று  கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.