
நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள். பின்பு நாக சைதன்யா சோபிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சோபிதா சினிமாவில் நடிக்க மாட்டார் என்ற தகவல்கள் இணையத்தில் வைரலானது. ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டகத்தி படம் மூலமாக ஹீரோவாக அவதாரம் எடுத்த தினேஷ் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறாராம். இந்த படத்திற்கு வேட்டுவம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் தினேஷுக்கு ஜோடியாக சோபிதா துலிபாலா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வெகு விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.