
தெலுங்கானா மாநிலத்தில் வரும் முப்பதாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. டிசம்பர் மூன்றாம் தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பிஆர்எஸ், பாஜக, காங்கிரஸ் என மூன்று கட்சிகளும் போட்டியிடுகின்றன. இதனால் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் மற்றும் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் தலைவரான மல்லிகார்ஜுனே வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், மகாலட்சுமி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம்தோறும் 2500 நிதி உதவி வழங்கப்படும்.
சமையல் எரிவாயு சிலிண்டர் 500 ரூபாய்க்கு வழங்கப்படும். பெண்களுக்கு அரசு பேருந்துகள் இலவச பயணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருமணம் ஆகும் பெண்களுக்கு பத்து கிராம் தங்கம் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் வழங்கப்படும். 24 மணி நேரம் மின்சாரம் வழங்கப்படும். 2 லட்சம் வரையிலான பயிர்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.