பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக அரசு சார்பில் கொண்டுவரப்பட்ட திட்டம்தான் சுகன்யா சம்ரிதி யோஜனா சேமிப்பு திட்டமாகும். இந்த திட்டத்தில் 10 வயதிற்கு குறைவாக இருக்கும் பெண் குழந்தைகள் முகவரி சான்றிதழ் மற்றும் ஆதார் கார்டு போன்ற ஆவணங்களை வைத்து அஞ்சலகம் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் அக்கவுண்ட் ஓபன் செய்து 250 ரூபாய் பணத்தை டெபாசிட் செய்யலாம்.

இந்த திட்டத்தில் தற்போது 8 சதவீதம் வட்டி வழங்கப்பட்டு வருகிறது. இதில் 21 ஆண்டுகள் டெபாசிட் காலமாக இருந்தாலும் 15 ஆண்டுகள் மட்டுமே பணம் செலுத்தினால் போதுமானது . அதாவது மாதம் உங்கள் பெண் குழந்தைக்காக 12,145 செலுத்தி வந்தால் 15 ஆண்டுகளில் 22,41,000 ரூபாயை முதலீடு செய்திருப்பீர்கள். அதற்கான வட்டி 44,75,145 ரூபாய் சேர்த்து மொத்தமாக 67,16,145 ரூபாய்  மெச்சூரிட்டி தொகை உங்களுக்கு கிடைக்கும்.