தமிழ்நாடு திருமண பதிவு சட்டம் 2009 படி திருமண பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி திருமணம் முடிந்த தம்பதிகள் 90 முதல் 150 நாட்களுக்குள் திருமணத்தை பதிவு செய்ய வேண்டும். திருமணத்தை பதிவு செய்யாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க இந்த சட்டம் வழிவகுக்கும். திருமணத்தை ஆன்லைன் மூலமாக எப்படி பதிவு செய்வது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். சார் பதிவாளர் அலுவலகத்தில் நேரில் விண்ணப்பிக்கும் ஆன்லைனில் விண்ணப்பித்தும் திருமணத்தை பதிவு செய்ய முடியும்.

ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க https://tnreginet.gov.in/portal என்ற இணையதள பக்கத்தில் திருமண பதிவு பகுதிக்குச் சென்ற விண்ணப்பத்தை பூர்த்தி செய்த உரிய ஆவணங்களை ஸ்கேன் செய்து மணமக்கள் மற்றும் சாட்சிகளின் படங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பித்து முடித்ததும் அருகில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அது அனுப்பி வைக்கப்படும். பிறகு சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து விண்ணப்பிக்கும் போது அளித்த மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ் வரும். அதில் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் வரவேண்டிய தேதி மற்றும் நேரம் இருக்கும். அன்றைய தினத்தில் ஆன்லைன் விண்ணப்பம், ஒரிஜினல் ஆவணங்கள் மற்றும் நான்கு சாட்சிகளுடன் சென்று திருமண பதிவு சான்று பெற்றுக் கொள்ளலாம்.