திருமணமான ஆண் மற்றும் பெண் ஒருவர், தங்களது திருமண உறவுகளை மீறி, பரஸ்பர சம்மதத்துடன் உடலுறவு வைத்துக் கொண்டாலும், அது குற்றமாகாது என கொல்கத்தா உயர்நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு, திருமணமான பெண்ணுடன் ஒரு திருமணமான ஆண் உறவு வைத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

இந்த வழக்கு, நீதிபதி பிபாஸ் ரஞ்சனின் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அவர் கூறியதாவது, “தொடக்கத்திலிருந்தே சம்மதத்துடன் நடந்த உடலுறவு வாக்குறுதியின் பேரில் ஏமாற்றமாகக் கருதப்பட முடியாது. இது பரஸ்பர ஈர்ப்பு மற்றும் ஒப்புதலின் அடிப்படையில் நிகழ்ந்தது எனக் கொள்ளப்படும்” என தெளிவுபடுத்தினார். இதற்கமைய, குற்றம் சாட்டப்பட்ட ஆண்மீது நடவடிக்கைகள் எடுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து, அந்த திருமணமான ஆணுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட புகாரை நீதிபதி ரத்து செய்தார். இந்த தீர்ப்பு, இந்தியாவில் திருமணத்தை மீறி உருவாகும் உறவுகளுக்கான சட்ட நிலையைப் பற்றிய விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளது. மேலும் திருமணத்தை மீறிய உறவில் ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் பரஸ்பர சம்பந்தத்துடன் உடலுறவு வைப்பது குற்றமாகாது என்று நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளது பேசும் பொருளாக மாறியுள்ளது.