கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வங்கி கணக்கில் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கும் திட்டமானது கடந்த 2023 ஆம் வருடம் தமிழக அரசு தொடங்கப்பட்டது. இதை முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். குடும்பத் தலைவிகள் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் பயன் அடையலாம்.

இந்த திட்டத்தில் ஏற்கனவே ஒரு கோடியே 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பயன் அடைந்து வருகிறார்கள். இந்த திட்டத்தில் ஆண் குடும்ப தலைவராக குறிப்பிடப்பட்டிருந்தால் அவருடைய மனைவிக்கு பணம் கிடைக்கும் .ஒருவேளை திருமணமாகாத பெண், கைம்பெண், திருநங்கை தலைமையில் குடும்பம் இருந்தால் அவர்களும்  குடும்பத் தலைவியாக கருதப்படுவார்கள்.